பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் சற்று நேரத்தில் நடைபெறும் குடமுழுக்கு! லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
இன்று நடைபெறும் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு குடமுழுக்கு நடக்க இருக்கிறது. காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பெருவுடையார் விமானம் உள்ளிட்டவற்றிற்கு மகா குடமுழுக்கு நடைபெறும். இதன் பின்னர் பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு நடைபெறும். மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடைபெறும். இதனைத் தொடர்ந்து நிறைவாக இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.
குடமுழுக்கைக் காண வரும் பக்தர்களுக்காக தஞ்சையில் சிறப்பான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் முன் அனுமதி பெற்ற 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இவர்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இடங்கள் தனித்தனியே பிரிக்கப்பட்டிருக்கும்.
குடமுழுக்கு விழாவை வந்துள்ள பக்தர்கள் அனைவரும் பார்வையிடுவதற்காக10 க்கும் மேற்பட்ட LED திரைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் இடையூறின்றி குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் மதிற்சுவருக்கு வெளியே 50 ஆயிரம் பேர் திரண்டு நின்று குடமுழுக்கைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் தொடங்கியது முதல் இன்று வரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பெரிய கோவிலுக்கு வந்துள்ள நிலையில் இன்று ஒரே நாளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.