பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாய் என்றும் பாராமல் மகன் செய்த பரபரப்பு செயல்.. இரத்த வெள்ளத்தில் ரணகொடூரம்.!
கஞ்சா, மதுவுக்கு அடிமையான மகனை கண்டித்த தாய், மகனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் பட்டுக்கோட்டை அருகே நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, மேலத்தெரு பவுதியை சார்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி அஞ்சம்மாள் (வயது 65). இவருக்கு பாவைநாதன் என்ற 38 வயது மகன் இருக்கிறார். இவரது மனைவி சரண்யா. பாவைநாதன் - சரண்யா தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், பாவைநாதன் பல மாதமாக சரிவர பணிகளுக்கு செல்லாமல் ஊர் ஊராக சுற்றி பொழுதை கழித்துவந்த நிலையில், கஞ்சா மற்றும் மதுபோதைக்கும் கடுமையாக அடிமையாகியுள்ளார்.
இதனைகவனித்த பாவைநாதனின் தாய், நல்லபடியாக வேலைக்கு சென்று மனைவி, பிள்ளைகளை காப்பாற்று என கண்டித்து வந்துள்ளார். தாயின் பேச்சையும் பாவைநாதன் கேட்டபாடில்லை. நேற்று இரவு நேரத்தில் போதையில் இருந்த பாவைநாதன், தாயின் வீட்டிற்கு வந்து அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த வாக்குவாதத்தில், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற பாவைநாதன், பெற்றெடுத்த தாய் என்று பாராமல் அஞ்சம்மாளை அடித்துள்ளார். இதனை தடுக்க வந்த சரண்யாவையும் அடித்து கீழே தள்ளியுள்ளார். பின்னர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து, அஞ்சம்மாளை சரமாரியாக கத்தியால் குத்தி இருக்கிறார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், அஞ்சம்மாள் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பட்டுக்கோட்டை காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து அஞ்சம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பாவைநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.