பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாயமான பெண் வயலில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்பு.. பட்டுக்கோட்டையில் பேரதிர்ச்சி சம்பவம்.!
குடும்ப சண்டையில் வீட்டை விட்டு வெளியேறிய 52 வயது பெண்மணி, வயல் வெளியில் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை, சூரப்பள்ளம் கிராமத்தில் வயல்வெளிப்பகுதியில் உடல் புதைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான காவல் துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், புதைக்கப்பட்டுள்ள பெண்மணி பட்டுக்கோட்டை திட்டக்குடி தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மனைவி அன்னபூரணி (வயது 52) என்பது தெரியவந்துள்ளது.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக குடும்ப சண்டையில் கோபித்துக்கொண்டு வீட்டினை விட்டு வெளியேறிய நிலையில், குடும்பத்தினர் அவரை தேடியும் காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் அன்னப்பூரணி நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.