#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறையிலிருந்து வீடு திரும்பி கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி... மீண்டும் சிறைக்கே சென்ற கணவர்...
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னராசு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சின்னராசுவின் மனைவி இறந்துள்ளார். சின்னராசு சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் சின்னராசுக்கு முன்னாள் எம்எல்ஏயின் தம்பி நளராஜாவின் மனைவிக்கு இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. நளராஜா கடந்த ஜனவரி மாதத்தில் லாரி உரிமையாளர் சதீஷ்குமாரை கொலை செய்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த நளராஜாவுக்கு மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. அதனையடுத்து நளராஜா மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலன் சின்னராசு இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் தங்களது கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து பேசி பழகி வந்துள்ளனர்.
இதனால் கேபமான நளராஜா சின்னராசுவை கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். அதன்படி நேற்று முன் தினம் இரவு சின்னராசுவும் மனைவியும் ஆட்டோவில் மாரியம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அவர்களை பின்தொடர்ந்து சென்ற நளராஜா, மனைவியின் முன்பு சின்னராசுவை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார் சின்னராசு. பின்னர் இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நளராஜாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.