பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பணம் நகை கொண்டு வந்ததால் திருமணம்... காதலியிடம் கொலை மிரட்டல் விடுத்த காதலன் கைது..!
திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பூதமங்களம் கிராமத்தில் காதலியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்பென்னாத்தூர் அருகே இருக்கும் பூதமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் ஏழுமலை (30). இவரும், 23 வயதுடைய இளம் பெண்ணும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்து உள்ளனர். இந்நிலையில் ஏழுமலை அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்நிலையில் ஏழுமலைக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்ததும் ஏழுமலையின் காதலி, ஏழுமலையை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு ஏழுமலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று தகாத வார்த்தையால் திட்டி கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி ஏழுமலையின் உறவினர்களும் அந்த பெண்ணை மிரட்டி உள்ளனர்.
மேலும் நகை, பணம் எடுத்து வந்தால் தான் திருமணம் செய்ய முடியும் என்று கேவலமான வார்த்தைகளால் பேசியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர். மேலும் ஏழுமலையின் உறவினர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.