'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
திருமணத்திற்கு முதல் நாள் காணாமல் போன மணப்பெண்.... சோகத்தில் குடும்பத்தினர்...!
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாகவே மணப்பெண் மண்டபத்தில் இருந்து திடீரென காணாமல் போனார்.
சென்னையை அருகே பல்லாவரத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஒருவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். வியாசர்பாடியை சேர்ந்த வாலிபருக்கும் அந்த பெண்ணிற்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில், நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மதியம் வீட்டு பின்புறத்தில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்த மணப்பெண் திடீரென காணாமல் போனோர்.
மணப்பெண் காணாமல் போனதால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை பல இடங்களில் தேடினார். ஆனால் நீண்ட நேரமாகியும் மணப்பெண் கிடைக்காததால், அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞருடன் மணப்பெண்ணுக்கு பழக்கம் இருந்தது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த திருமணம் பிடிக்காமல் அவருடன் சென்றுள்ளாரா என்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணத்திற்கு முதல் நாள் மணமகள் காணாமல் போனதால் திருமணம் நின்றுபோனது. இதனால் இரு வீட்டாரும் சோகத்தில் உள்ளனர்.