கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளியின் காலை துளைத்த தோட்டா.. எங்கிருந்து வந்தது அந்தத் தோட்டா..?



the-bullet-that-pierced-the-leg-of-the-construction-wor

சென்னை திரிசூலம் பகுதியில் கட்டிடவேலியில் ஈடுபட்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் காலில் துப்பாக்கி தோட்டா துளைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று திரிசூலத்தில் சங்கர் என்பவரின் வீடு கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் பணியில் பீகாரை சேர்ந்த அஸ்லாம் என்ற வாலிபர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென்று வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அஸ்லாம் வலியால் துடிதுடித்து கதறினார்.

Construction worker

இதனையடுத்து அஸ்லாமை சக தொழிலாளர்கள் அழைத்துக் கொண்டு சென்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அஸ்லாமை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காலில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து இருந்ததை கண்டறிந்து அகற்றியுள்ளனர். மேலும் இது குறித்து பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திரிசூலம் பகுதிக்கு அருகே உள்ள மீனம்பாக்கத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் துப்பாக்கி பயிற்சி மையத்தில் பயிற்சிக்காக பயன்படுத்திய தோட்டா என்பதும் மேலும் வீரர்கள் அந்த நேரத்தில் பயிற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.