பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கைக்குழந்தையுடன் கோவையில் இருந்து சென்னைக்கு 5 நாட்களாக நடந்தே சென்ற தம்பதி.! கண்கலங்கவைக்கும் காரணம்.!
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் வெளியூரில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியில்லாமல் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவையை சேர்ந்த தொழிலாளி தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் சென்னைக்கு செல்வதற்காக 5 நாட்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கோவை மாவட்டம், மதுக்கரைப் பகுதியை சேர்ந்தவர் நவீன்(25). இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. குடும்ப வறுமை காரணமாக, சென்னையில் ஹாலோபிரிக்ஸ் கல் தயாரிக்கும் வேலைக்குச் செல்ல, தனது குழந்தையுடன் கடந்து 5 நாட்களாக நடந்தே சென்னையை நோக்கிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் வேலூர் வழியாக நடந்து செல்வதை பார்த்த வேலூர் கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர், அவர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது நவீன் கூறுகையில், எனது பெற்றோர் வயதானவர்கள், தாய்க்கு உடல்நிலை சரியில்லாததால் 30 ஆயிரம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தோம். கொரோனா பொது முடக்கத்தால் வேலை இல்லாததால் வீட்டு வாடகை கூட கட்ட முடியவில்லை. உணவுக்கும் வழியில்லை.
இந்தநிலையில் தான் சென்னையில் வேலையுடன் தங்க இடம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால் தான் நடந்தே சென்னைக்கு சென்றுவிடலாம் என துணிந்து புறப்பட்டுவிட்டோம் என தெரிவித்துள்ளார். பின்னர் அந்த தம்பதிகளுக்கு உதவும் வகையில் தனது தொண்டு நிறுவனத்தின் காரில் அவர்களை அழைத்துச் சென்று சென்னையில் விட்டுள்ளார் வேலூர் கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர்.