பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த கல்லூரி பேருந்து.. ஈரோடு அருகே பரபரப்பு..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. சம்பவத்தன்று இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்தானது கல்லூரியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்போது கல்லூரி பேருந்தானது மேட்டுப்புதூர் பகுதியில் உள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர்.
மேலும் 5ற்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்குள்ளான கல்லூரி பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.