அப்பாவிடம் சொத்தை பிடுங்கி வீதியில் நிறுத்திய மூத்த மகன்: இளைய மகனுடன் போராடி தவிக்கும் தகப்பன்.!



The eldest son who snatched the property from his father and parked it on the street

சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியைச் சார்ந்தவர் கிரிராஜ் (வயது 72). இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக இவரது மனைவி உயிரிழந்துவிட்டார். இவரின் இரண்டு மகன்களையும் படிக்க வைத்து நல்ல பொறுப்புகளுக்கு அனுப்பி வைத்து தற்போது வயதான காலத்தில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். 

இந்நிலையில் மூத்த மகன் கிஷோர்குமார் வீட்டை அபகரித்து, அவரது சகோதரர் கிருஷ்ணகுமார் மற்றும் தந்தை கிரிராஜ் ஆகியோரை வெளியே துரத்தி இருக்கிறார். இதனால் கடந்த ஓராண்டாக உறவினரின் வீட்டில் தங்கி இருக்கும் கிரிராஜ் நீதிமன்றத்தின் உதவியை நாடிய போது தீர்ப்புகள் வரை 20 ஆண்டுகள் ஆகலாம் என தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து சட்டப்படி வட்டாட்சியரிடம் முறையிடவே, அவர்கள் தந்தையை வீட்டில் அனுமதிக்க கோரி ஆணை வழங்கியும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை. தனது சுய உழைப்பில் கஷ்டப்பட்டு வாங்கிய வீட்டில் வயதான காலத்தில் தங்குவதற்கும் வாய்ப்பில்லை என கண்ணீர் வடிக்கும் கிரிராஜ், இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.