#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் இரவு காட்சிகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்ட கணவர்... அதிர்ச்சியில் பெண் வீட்டார்..!!
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் வசிப்பவர் வீரபாபு. கடந்த மாதம் பிப்ரவரி 8ஆம் தேதி, இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி திருமணம் நடந்தது.
அதன் பின்னர் புதுமண தம்பதிக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது வீரபாபு தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை அவருக்கு தெரியாமல் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர், அந்த வீடியோவை வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்த பெண்வீட்டார் மருமகனிடம் இதுபற்றி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், பஞ்சாயத்தில் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயன்றனர். இது தொடர்பாக பெண்ணின் மாமியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீரபாபுவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இளைஞர் ஒருவர் முதலிரவு காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.