சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடகைக்கு தண்ணீர் டேங்கர் லாரி எடுத்து சாராயம் காய்ச்சிய நபர்.!
கொரோனா தொற்றின் 2வது அலை தற்போது நாடு முழுவதும் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அரசு டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொண்டு தற்போது கள்ளச்சந்தையில் பல இடங்களில் மது விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டை கிராமத்தில் சாராயம் காய்ச்சுவதற்கு தண்ணீர் இல்லாததால் வாடகைக்கு தண்ணீர் வாங்கி சாராயம் காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆலங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பாச்சிக்கோட்டைபகுதியில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல பாச்சிக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் என்ற நபர் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சாராயம் காய்ச்ச திட்டமிட்டுள்ளார்.
ஆனால் காட்டுப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால், வாடகைக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீரை கொண்டு சென்று, சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாராயம் காய்ச்சும் பணியில் ஈடுபட்ட ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.