#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடுராத்திரியில் கேட்ட அலறல் சத்தம்.. எழுந்து வந்து பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
திருவண்ணாமலை மாவட்டம் குளமந்தை பகுதியில் வசித்து வருபவர் அமரேசன். இவருக்கு நிவேதா என்று மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர்கள் குடும்பத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி விட்டு பின்பு உறங்க சென்றுள்ளனர்.
அப்போது உறங்கிக் கொண்டிருந்த நிவேதா திடீரென்று அலறி கூச்சல் போட்டுள்ளார். இதனையடுத்து பதறிப்போய் எழுந்து வந்த பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது நிவேதா வலியால் துடித்துக் கொண்டிருந்தார். மேலும் அவரது பக்கத்தில் பாம்பு ஒன்று கிடந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து நிவேதா சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து நிவேதாவின் பெற்றோர் அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நிவேதா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுமி பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.