பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நீ எவளா இருந்தா எனக்கென்ன?!,, டீச்சரை ஓரங்கட்டி குடுமிபிடி சண்டையிட்ட மாணவிகள்!,, பரபரப்பான பஸ் ஸ்டாண்ட்..!
திருநெல்வேலி மாநகராட்சியில் முக்கிய பேருந்து நிலையமாக பாளை பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் வழியாக ஏராளமான பேருந்துகள் தினந்தோறும் சென்று வருகிறது. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்வது வழக்கம்.
இதன் காரணமாக, காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், அந்த பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான அரசு நிதி உதவி பெறும் சாரா டக்கர் பள்ளியில் வகுப்பை முடித்துவிட்டு நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் சில மாணவிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.
இந்த சண்டையை பள்ளி ஆசிரியை தடுக்க முயற்சி செய்தும், விடாபிடியாக தலை முடியை பிடித்து மாணவிகள் சண்டையிட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் வெளியான காட்சிகளை அடிப்படையாக கொண்டு இன்று காலை சாரா டக்கர் பள்ளிக்கு சென்ற காவல்துறையினர், கைகலப்பில் ஈடுபட்ட மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பேருந்தில் அமருவதற்கு இடம் பிடிக்க ஏற்பட்ட போட்டியில் தகராறு ஏற்பட்டதாக மாணவிகள் கூறியுள்ளனர். இதனை அடுத்து அவர்களது பெற்றோர்களை வரவழைத்த காவல்துறையினர் அவர்களது முன்னிலையில் மாணவிகளுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.