பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரால் பரபரப்பு... பெற்றோர் அளித்த புகாரை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி எடுத்த நடவடிக்கை.!
சேலம் அருகே எடப்பாடியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக துணை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி அரசிராமணி குள்ளம்பட்டி அருகேயுள்ள மலை மாரியம்மன் காலனியில் செயல்பட்டு வருகிறது அரசு தொடக்கப்பள்ளி. இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் .
இந்நிலையில் இங்கு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வரும் அறிவழகன் என்பவர் மது போதையில் வகுப்பிற்கு வருவதாக மாணவ மாணவிகள் தங்களது பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வந்து சோதனை நடத்திய மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆசிரியர் போதையில் இருப்பதை உறுதி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் அந்த ஆசிரியர் மீது துணை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரிடம் உறுதியளித்தனர். மேலும் அந்த ஆசிரியர் இதற்கும் முன் பணியாற்றிய இரண்டு பள்ளிகளில் மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்ததாக இரண்டு முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.