ஏ.ஆர் ரகுமான் இளமையாக இருப்பதற்கு காரணம் இதுதானா..! அவரே கூறிய உண்மை.!?
வட்டிக்கு பணம் தர மறுத்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. வாலிபரின் வெறிச்செயல்..!
விழுப்புரம் சிந்தேரி கரைப்பகுதியில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இவரிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் வட்டிக்கு பணம் கேட்டுள்ளார்.
ஆனால் பாலாஜிக்கு வட்டிக்கு பணம் தர ராம்குமார் மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சிறிய கைகளப்பும் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தால் ஆத்திரம் அடைந்த பாலாஜி ராம்குமாரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் ராம்குமார் வெளியே சென்று இருந்த போது தனது நண்பர்களுடன் அவரை வழிமறித்து பாலாஜி தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராம்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவத்தில் ராம்குமார் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.