#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊராட்சித் தலைவிகளான விவசாயியின் இரு மனைவிகள்!
வந்தவாசி அருகே கோவில் குப்பம், வழுர் அகரம் ஆகிய இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களாக முன்னாள் ஊராட்சி தலைவரின் மனைவிகள் செல்வி தனசேகரன், காஞ்சனா தனசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் வழூர்-அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். விவசாயியான இவர் இரு மனைவிகளோடு வழூரில் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.
கடந்த முறை வழூர்-அகரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தனசேகரன், இந்த முறை அவரது மனைவி செல்வியை வழூர் கிராம தலைவர் பதவிக்கும், மற்றொரு மனைவி காஞ்சனா என்பவரை கோவில்குப்பம் கிராம தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்துள்ளார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தேர்தல் முடிவுகள்படி தனசேகரனின் மனைவிகள் செல்வி மற்றும் காஞ்சனா இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.