#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தென்மாவட்டத்தில் இப்படியொரு சாதிய கொடூரம்?.. ஜாதி மாறி திருமணம் செய்தவரை காலில் விழச்சொன்ன பயங்கரம்.!
மனம் ஒத்துப்போய் தன்னை உயிராய் காதலித்த பெண்ணை கரம்பிடித்து திருமணம் செய்தவர் ஊருக்குள் வர காலில் விழவேண்டும் என கூறிய 3 சாதி வெறியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதமில்லாத யானை போல அமைதியாக இருந்தாலும், தென்மாவட்டத்தில் நடக்கும் ஜாதிய தீண்டாமைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கரிவலம்வந்த நல்லூரில் வசித்து வந்தவர் பாலமுருகன். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, ஊரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், தனது உறவினரின் திருமணம் ஊரில் வைத்து நடைபெற்ற நிலையில், பாலமுருகன் அதற்காக தனது சொந்த ஊர் சென்றுள்ளார். அப்போது, அவரை மறித்த சிலர், வேறுசாதி பெண்ணை திருமணம் செய்துள்ளதால் நீ ஊருக்குள் வரக்கூடாது என கூறியுள்ளனர்.
மேலும், அதையும் தாண்டி கட்டாயம் ஊருக்குள் வர வேண்டும் என்றால், தங்களின் கால்களில் விழுந்தால் ஊருக்குள் சென்று வரலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக பாலமுருகன் கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனின் புகாரில் குறிப்பிட்டுள்ள 4 பேரை கைது செய்தனர். மேற்படி விசாரணை நடந்து வருகிறது.