பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மனைவியை கொன்று உடலை கோழிக்கூண்டில் வைத்த கணவன்.. 5 நாட்களாக உல்லாச வாழ்க்கை.. தேனியில் பகீர் சம்பவம்.!
தனது மனைவியை கொலை செய்த கணவர், 5 நாட்களாக உல்லாச சுற்றுலா மேற்கொண்ட அதிர்ச்சி சம்பவம் தேனி அருகே நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, வருசநாடு தனிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவரின் மனைவி அம்சகொடி (வயது 50). கணேசன் மதுபானம் அருந்தும் பழக்கம் வைத்திருந்ததால், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்த கணேசன், ஆத்திரத்தில் அம்சகொடியை கட்டையால் அடித்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். ஆத்திரத்தில் கொலை செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த கணேசன், மனைவியின் உடலை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதனையடுத்து, ஊரில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள குமணன்தொழு கிராமத்தில் மதுவாங்கி குடித்துவிட்டு, விடுதியில் தங்கியிருந்து கடந்த 5 நாட்களை கழித்து வந்துள்ளார். 5 நாட்களுக்கு பின்னர் வீட்டிற்கு வந்த கணேசன், மனைவியின் உடலை இழுத்து சென்று கோழிக்கூண்டில் அடைத்து வைத்துள்ளார்.
உடல் அழுகி இருந்த காரணத்தால் துர்நாற்றம் வீச, அப்பகுதி மக்கள் கடமலைக்குண்டு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கோழிக்கூண்டில் அழுகிய நிலையில் இருந்த அம்சகொடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்து கணேசனை கைது செய்தனர்.