#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அக்காவின் வாழ்க்கையை சரிசெய்ய எண்ணி, மாமாவை கொலை செய்த மச்சான்; தேனியில் ஓடஓட விரட்டி பயங்கரம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரின் மனைவி சுகந்தி.
தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஷ் - சுகந்தி தம்பதிகள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதனிடையே, ராஜேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் கள்ளக்காதல் வயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சுகந்தியின் சித்தி மகன் சிவமூர்த்தி என்பவருக்கு தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று கறிக்கடையில் இருந்த தனது மாமா ராஜேஷ் குமாரை பார்த்த சிவமூர்த்தி, அக்காவுடன் சேர்ந்து நலமுடன் வாழக்கூறி ஆலோசனை கூறியுள்ளார்.
இதனை கேட்க மறுத்த ராஜேஷ் குமார் வாக்குவாதம் செய்யவே, ஆத்திரமடைந்த சிவமூர்த்தி தனது மாமா ராஜ்குமாரை கறிக்கடை கத்தி எடுத்து ஊடஓடவிரட்டி வெட்டிக்கொலை செய்தார்.
நிகழ்விடத்திலேயே ராஜேஷ் குமார் பரிதாபமாக பலியாகிவிட, தகவல் அறிந்த போடி நகர் காவல் துறையினர் சிவமூர்த்தியை கைது செய்தனர்.