#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடிக்க பணம்தராத தாயின் தலையை கோடாரி வைத்து பிளந்து கொன்ற மகன்.. நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
தேனி மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி, மஞ்சளாறு காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரின் மனைவி ஜோதிலட்சுமி. தம்பதியின் மகன் மருதுபாண்டி (வயது 23). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
மதுபோதைக்கு அடிமையான மருதுபாண்டி, தினமும் பெற்றோரிடம் சண்டையிட்டு மதுபானம் அருந்த பணம் வாங்கி செல்லும் வழக்கத்தை வைத்துள்ளார். இந்நிலையில், நேற்றும் ஜோதிலட்சுமி மதுபானம் அருந்த பணம் கேட்டு இருக்கிறார்.
அப்போது, பணம் கொடுக்க ஜோதிலட்சுமி மறுப்பு தெரிவிக்கவே, மருதுபாண்டி வீட்டில் இருந்த கோடாரியை வைத்து தாயின் தலையை வெட்டி கொலை செய்துள்ளார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிய ஜோதிலட்சுமி தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், மருதுபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.