#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருக்குறள் சொன்னால் பிரியாணி இலவசம்.. எங்கு தெரியுமா?
பண்டிகை நாட்களில் ஒவ்வொரு கடைகளிலும் வித்தியாசமான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சில வித்தியாசமான மற்றும் அறிவுப்பூர்வமான ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிரியாணி கடையில் வித்தியாசமான ஆஃபர் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் நடைபெறும் போட்டியில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 10 திருக்குறள் மனப்பாடமாக சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20 திருக்குறள் சொன்னால் ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருவருக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.