பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கோவிந்தா.. கோவிந்தா..!! 4 ஏக்கர் நிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில்.! பூமிபூஜையைத் தொடங்கி வைத்தார் முதல்வர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 ஏக்கர் பரப்பளவில், திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் ஸ்ரீவெங்கடேஸ்வர சுவாமி கோவில் கட்டுவதற்கான பூமிபூஜையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆந்திராவில் உள்ள ஏழுமலையான் கோவிலைப்போல நாட்டின் பல இடங்களில் கோவில்களை அமைக்க திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டு கோவில்களை கட்டி வருகிறது.
அந்தவகையில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் ஏழுமலையான் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் ஏழுமலையான் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கான 4 ஏக்கர் நிலத்தினை உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. குமரகுரு வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பூமி பூஜையை தொடங்கி வைத்தார். மேலும் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையையும் முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ குமரகுரு, அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.