பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தாலிகட்டியதும் காதல் மனைவியை தெருவில் தவிக்கவிட்டு சென்ற காதல் கணவன்.! பெண் கண்ணீர் போராட்டம்.!
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெய்யூர் கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவரின் மகள் லட்சுமி (வயது 23). லட்சுமி டிப்ளமோ நர்சிங் பயின்றுள்ளார். இவரின் வீட்டருகே வசித்து வந்த இளைஞர் சின்ராசு. இவர்கள் இருவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்த நிலையில், காதலியிடம் ஆசை வார்த்தை கூறிய சின்ராசு, லட்சுமியோடு உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனால் அவர் கர்ப்பமாகவே, தகவலை காதலனுக்கு தெரியப்படுத்திய லட்சுமி திருமணம் செய்ய கோரிக்கை வைத்துள்ளார். திருமணம் செய்ய வேண்டும் என்றால் கருவை கலைத்து வா என சின்ராசு கூறிவிட, லட்சுமியும் காதலன் தன்னை கரம்பிடிப்பான் என்ற நம்பிக்கையில் கருவை கலைத்துள்ளார்.
இந்த நிலையில், காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடப்பதை தெரிந்துகொண்ட லட்சுமி, ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, நான் காதலியை மணந்துகொள்கிறேன் என சின்ராசு எழுதி கொடுத்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, ஜனவரி மாதம் இருதரப்பு உறவினர்கள் முன்னிலையில் தாலி கட்டி திருமணம் நடந்த நிலையில், திருமணம் முடிந்ததும் லட்சுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்ற சின்ராசு, பஜார் பகுதியில் தனியே தவிக்கவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி மீண்டும் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துரிதப்படுத்தும் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மனவேதனையடைந்த லட்சுமி காதலன் சின்ராசின் வீட்டு முன்பும் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்து வருகிறார்.