பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
விமான நிலையத்தில் தமிழுக்கு அழகு சேர்க்கும் வகையில் அசத்தல்!. விமான பயணிகள் மகிழ்ச்சி!.
திருச்சி விமான நிலையத்தில் 250 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்தார்.
திருச்சி விமான நிலைய வளாகத்தில் பூம்புகார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட 250 கிலோ எடை கொண்ட திருவள்ளுவர் சிலையை நேற்று (புதன்கிழமை) திருச்சி மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.
தமிழுக்கு அழகு சேர்க்கும் வகையில் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலைக்கு அனைவரும் மலர் தூவி மரியாதையை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் போது, விமான நிலைய இயக்குனர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். மேலும் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் கூறுகையில் தமிழுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது என கூறினர்.