#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
17 வயது சிறுமி பாலியல்., காமுகன் அதிரடி கைது.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்.!
11ஆம் வகுப்பு பயின்றுவரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி அருகாமையில் ஓதலவாடி, சூசை நகர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த கெல்வின் (வயது 23) என்ற வாலிபருடன் நண்பராக பழகி வந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கெல்வின், மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்து சென்ற நிலையில், அங்கு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் உடனடியாக மாணவி அங்கிருந்து தப்பித்து, தனது ஊர் பொதுமக்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.
இதனை கேட்ட ஓதலவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர். புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல காப்பகம் துறையை சேர்ந்த அதிகாரிகள் பள்ளி மாணவியிடம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில் உண்மை நிரூபிக்கப்பட்டதால், உடனடியாக கெல்வின் மீது குழந்தைகள் நல மாவட்ட அலுவலர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கெல்வினை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.