மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
100 நாள் வேலையில் இருந்த 95 பேருக்கு தேனீக்கள் செய்த சம்பவம்; திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்.!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகேயுள்ள பகுதியில், இன்று சுமார் 100க்கும் மேற்பட்டோர், 100 நாள் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்த சமயத்தில், அங்கிருந்த தேன் கூட்டை எதிர்பாராத விதமாக அவர்கள் கலைத்ததாக தெரியவருகிறது. இதனால் வேலை பார்த்துக்கொண்டு இருந்தோரை தேனீ பதம்பார்த்துள்ளது.
அங்குள்ள 95 பேர் மொத்தமாக தேனீக்களால் கொட்டப்பட்ட நிலையில், அவர்கள் ஆனைக்குப்பம், நன்னிலம் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.