மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளி வளாகத்தில் இருந்த காந்தி சிலை சேதம்; மர்ம நபர்கள் வெறிச்செயல்..!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல், வடக்கண்டம் பகுதியில் ஊராட்சி மன்ற நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1957ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை பெய்த மழை மற்றும் தீபஒளி பண்டிகை காரணமாக தொடர்ந்து 5 நாட்களுக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அவ்வளாகத்தில் இருந்த காந்திஜி சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்தது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் காந்தி சிலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.