மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தன்; வரதட்சணை கொடுமை செய்த மாமியார்... கடப்பாரையால் பதில் சொன்ன மருமகள்.! சிங்கப்பெண்ணே....!
வரதட்சணை கொடுமை, கொழுந்தனின் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்மணி கணவரின் வீட்டுக்கு வெளியே 20 நாட்கள் போராட்டம் நடத்திய நிலையில், ஆவேசமாக கணவரின் வீட்டை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்ற சம்பவம் நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் அன்பழகன். இவரது மகள் பிரவீனா. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மன்னம்பந்தலை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நடராஜன். ப்ரவீனா - நடராஜன் இடையே கடந்த 2021 பிப்ரவரி மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
பெண் வீட்டார் சார்பாக திருமணத்தின்போது 24 சவரன் நகைகள், மாப்பிள்ளைக்கு இரு சக்கர வாகனம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன. மூன்று மாதம் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், வேலைக்காக நடராஜன் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனால் கணவரின் வீட்டில் இருந்த ப்ரவீனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மாமியார் மருமகளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளார். இதற்கிடையே கணவரின் தம்பியான சதீஷ், சகோதரர் நடராஜன் வெளியில் இருப்பதை பயன்படுத்தி அண்ணிக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார்
இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி மாமியாரிடம் கூறிய போது, அதனை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். இதுகுறித்து மனைவி கணவரிடம் தெரிவித்த போது, அவர் பிரவீனாவை நம்பாமல் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் பிரவீனாவை கணவரின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், எனது மகன் உன்னுடன் வாழ மாட்டான் என்று கூறி வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் உறவினரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனால் பிரவீனா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், கடந்த 20 நாட்களாக தனது வீட்டிற்கு செல்லாமல் கணவரின் வீட்டு வாசலிலேயே போராட்டம் நடத்தி வந்துள்ளார்.
ஊர் பஞ்சாயத்து பேசியும் நடராஜனின் குடும்பத்தினர் மதிக்காத நிலையில், சம்பவத்தன்று பிரவீனா பொதுமக்களுடன் மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று இரவில் பொதுமக்கள் முன்னிலையில் கணவரின் வீட்டு கதவை கடப்பாரையால் உடைத்த ப்ரவீனா வீட்டிற்குள் சென்றார்.