#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விருந்துக்கு சென்ற புதுமணத்தம்பதி, விருந்து வைத்தவர் மூவரும் மரணம்.. ஆற்றுச் சூழலில் சிக்கி பரிதாபம்..!
திருமணமாகி 1 மாதமாகும் நிலையில், விருந்துக்கு சென்ற புதுமணத்தம்பதி மற்றும் விருந்து வைத்தவர் என மூவரும் ஆற்றுச்சூழலில் சிக்கி மரணித்த சோகம் நிகழ்ந்துள்ளது.
தேனி மாவட்டம் போடி, சுப்புராஜ் நகர், புதுக்காலனி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய்குமார் (வயது 24). இவர் லண்டனில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்துவந்தார். இவரது தாய் மாமா தேனி பொம்மையன்கவுண்டன் பகுதியைச் சேர்ந்த அழகுராஜா (வயது 30). இவர் கோவையில் இருந்து மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்துவந்துள்ளார்.
இவருக்கும் கோவையைச் சேர்ந்த காவியாவிற்கும் கடந்த ஒரு மாதம் முன்பு திருமணம் நடந்த.து இதனால் அழகுராஜா மற்றும் அவரது மனைவியை சஞ்சய் குமார் விருந்துக்கு அழைத்த நிலையில், சனிக்கிழமை போடிக்கு வந்த புதுமண தம்பதியினர், சஞ்சய் குமாரின் வீட்டில் தங்கியிருந்தனர். தொடர்ந்து சஞ்சய் குமார், அழகுராஜா, காவ்யா மற்றும் சஞ்சய்குமாரின் சித்தி மகன் ஆகியோர் பெரியாற்றுக்கொம்பை ஆற்றில் குளிக்க சென்றனர்.
அப்போது போடி பகுதியில் பலத்த மழை பெய்துவந்ததால், காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், ஆங்காங்கே நீர் சுழல்களும் ஏற்பட்டுள்ளன. இது அறியாத அவர்கள் பதினெட்டாம்பட்டி கேணி என்ற இடத்தில் ஆற்றில் இறங்கிய நிலையில், நீர் சுழலில் சஞ்சய்குமார் சிக்கிக்கொண்டார். அவரை காப்பாற்ற முயன்ற அழகுராஜா, மனைவி காவியாவும் நீர்ச்சுழலில் சிக்கி மூழ்கினர்.
இதனால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபடவே, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் நீரில் மூழ்கி இறந்த மூவரின் சடலங்களையும் மீட்டனர். அத்துடன் போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.