#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சீல் வைக்கப்பட்ட குடோனில் 30 டன் தாதுமணல் திருட்டு..! தென்னகமே அதிர்ச்சி., பரபரப்பு குற்றசாட்டு.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை, கீரைக்காரன்தட்டு பகுதியை சேர்ந்தவர் வி.வி மினரல் அதிபர் வைகுண்டராஜன். இவருக்கு சொந்தமான தாதுமணல் குடோன் வல்லான்விளை மற்றும் குட்டம் பகுதியில் உள்ளது. வைகுண்டராஜனின் மீது எழுந்த தாதுமணல் கடத்தல் புகாரை தொடர்ந்து, ககன்தீப் சிங் பேடி, சத்யப்ரதா சாஹு ஐ.ஏ.எஸ் அவர்கள் தலைமையிலான குழு குடோனில் உள்ள தாதுமணலை கணக்கீடு செய்து சீல் வைத்து சென்றது.
இந்த நிலையில், வல்லான்விளை வி.வி. மினரல் குடோனில் வைக்கப்பட்டுள்ள சீல்களை வைகுண்டராஜன் மற்றும் அவரது மகனின் தரப்பு ஆதரவாளர்கள் உடைத்து இலுமினைட், கார்னட் தாதுப்பொருளை லாரிகளில் திருடி தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் செயல்படும் நிறுவனத்திற்கு போலி ஆவணங்கள் மூலமாக விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.
சில சமயங்களில் வெளிநாடுகளுக்கும் இவை கடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், பல்வேறு காலகட்டத்தில் லாரிகள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், TN 52 E 3612 பதிவெண் கொண்ட லாரி 30 டன் தாதுமணல் கடத்தலில் ஈடுபட்டபோது பாளையங்கோட்டை காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.