#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளரின் வாகனத்திற்கு தீவைத்த மர்ம நபர்கள்.. பல்லடத்தில் பகீர் சம்பவம்.!
தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியின் 15 ஆவது வார்டில், அதிமுக கூட்டணி சார்பில் த.மா.கா முத்துக்குமாரசாமி இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளராக களம்கண்டார். நேற்று வகுப்பதிவுகள் நிறைவுபெற்று, இரவில் அதிமுக மற்றும் த.மா.கா நிர்வாகிகள் ஆலோசனை நடத்திக்கொண்டு இருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, கொசவபாளையம் சாலையில் இருக்கும் மாகாளியம்மன் கோவில் பகுதியில் முத்துக்குமாரசாமி மற்றும் அவரின் நண்பர் ராஜேந்திரன் ஆகியோர், இருக்கசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு காரில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். நள்ளிரவு 12 மணியளவில் 2 இருசக்கர வாகனமும் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் முத்துகுமாரசாமிக்கு தகவல் தெரிவிக்கவே, அவர் சம்பவ இடத்திற்கு விரைவதற்குள் வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இந்த விஷயம் தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விசாரணையில் மர்ம நபர்கள் முத்துக்குமாரசாமி மற்றும் அவரது நண்பரின் வாகனத்திற்கு தீ வைத்து சென்றது அம்பலமானது. மர்ம நபர்களுக்கு வலைவீசப்பட்டுள்ளது.