#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேசிய அளவிலான யோகா போட்டியில் வெற்றிபெற்ற திருப்பூர் மாணவன்.. மகிழ்ச்சியில் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம்.!
திருப்பூர் தேசிய அளவிலான யோகா போட்டி, சமீபத்தில் கோவாவில் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் 9 மற்றும் 10 வயது பிரிவிற்கான யோகா போட்டியில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரனேஷ் மூன்றாம் இடம் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் திருப்பூர் பிளாட்டோஸ் அகாடமி பள்ளி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர் பிரனேஷை பள்ளி தாளாளர் ஹரிகிருஷ்ணன், அறங்காவலர் கிறிஸில்டா லோபஸ், பள்ளி முதல்வர் ஸ்ரீ குமாரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் தேசிய அளவில் வெற்றிபெற்று பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் பிரனேஷ்க்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.