விநாயகர் கோவிலில் அருகே பச்சிளம் குழந்தை மீட்பு.. திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்.!



tiruvannamalai-baby-rescued-near-vinayagar-temple

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தை விநாயகர் கோவில் அருகே கைவிடப்பட்டு சென்ற சோகம் நடந்துள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் கிராமம் அருகே தூசி காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் அருகில் விநாயகர் கோவில் இருக்கிறது. இந்நிலையில், இன்று காலை 4 மணியளவில் விநாயகர் கோவில் வளாகத்தில் பச்சிளம் குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. 

இதனைக்கண்ட மக்கள் அருகே சென்று பார்க்கையில், பிறந்து சில நாட்களேயான ஆண் குழந்தை இருந்துள்ளது. பதறிப்போன மக்கள் குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பணியில் இருந்த காவல் துறையினர் குழந்தையை சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tiruvannamalai

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தையை விநாயகர் கோவில் அருகில் விட்டு சென்றது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.