தந்தை இறந்த துக்கம் தாளாது, மகனும் எலிமருந்து சாப்பிட்டு தற்கொலை..! சோகத்தில் மூழ்கிய கிராம மக்கள்.!



Tiruvannamalai Polur Near Village Son Suicide Father Already Suicide Feeling Sad

குருவிமலை கிராமத்தில் தந்தை எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்த சோகத்தில், மகனும் தனது உயிரை எலிமருந்து சாப்பிட்டு மாய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், குருவிமலை கிராமத்தில் வசித்து வந்தவர் சேட் (வயது 50). இவரின் மகன் ராஜ்குமார் (வயது 27). சேட் கடந்த 20 ஆம் தேதி தற்கொலை செய்ய முடிவெடுத்து, எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, குடும்பத்தினர் அவரின் உடலை கடந்த ஜன. 31 ஆம் தேதி நல்லடக்கம் செய்த நிலையில், தந்தை இறந்த துக்கத்தில் மகன் இருந்துள்ளார். மேலும், அன்றைய நாளின் இரவில் பேருந்து மூலமாக ராஜ்குமார் புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தந்தை சென்ற இடத்திற்கே சென்றுவிடலாம் என்று எண்ணிய ராஜ்குமார், எலி மருந்தை தின்று தற்கொலை முயற்சி செய்திருந்தார். 

Tiruvannamalai

அரை மயக்கத்தில் இருந்த ராஜ்குமாரை மீட்ட உருளையன்பேட்டை காவல் துறையினர் விசாரணை செய்து, அவரின் உறவினரை வரவழைத்து இருக்கின்றனர். பின்னர், ராஜ்குமார் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை நேரத்தில் ராஜ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ராஜ்குமாரின் உறவினர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குருவிமலை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.