ஒமிக்ரான் அச்சம்..! மீண்டும் பள்ளி மாணவர்கள் ஆல்பாஸ்?.. தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டம்?..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை தொடர்ந்து, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள், மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்திய அளவில் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேரடி வகுப்பு இரத்து செய்யப்பட்டுள்ளன.
இது கொரோனா பரவலை எதிர்க்க தமிழக அரசு முழுவீச்சில் தயாராகியுள்ளதை உறுதி செய்யும் நிலையில், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களுக்கு தேர்வு எப்படி? என்ற கேள்வியும் அடுத்தபடியாக எழத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை மீண்டும் ஆல்பாஸ் திட்டத்தை கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 9 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.