#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#Breaking: மதுபிரியர்களுக்கு ஷாக் செய்தி.. 2 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டது விடுமுறை..!
தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அரசு மதுபானக்கடைகள், முக்கிய விழா நாட்கள் மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் இயங்காது. அதேபோல, மாவட்ட அளவிலான விழாநாட்களின்போதும் விடுமுறை அறிவிக்கப்படும்.
இந்நிலையில், வரும் செப். 28ம் தேதி இஸ்லாமியர்களின் மிகமுக்கிய பண்டிகையாக கருதப்படும் மிலாடி நபி கொண்டாடப்படவுள்ளது. அதேபோல, அக்டோபர் மாதத்தில் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது.
இதனால் இவ்விரண்டு நாட்களிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 நாட்களிலும் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவினை மீறி மதுபானம் விற்பனை செய்யப்படும் பட்சத்தில், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு தனது செய்திக்குறிப்பில் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.