#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செய்தி: பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கப்படுமா?...!
பொங்கல் 2023க்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.
தைப்பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய பரிசு பொருட்கள் கொடுக்கப்படும். கடந்த வருடம் மக்கள் பணம் எதிர்பார்த்த நிலையில், 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மட்டுமே கொடுக்கப்பட்டது. பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை,
இந்த வருடமாவது பொங்கல் பரிசாக ஆயிரம் கிடைக்குமா? என மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் வழங்கப்படும் என கூட்டத்தில் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த பணம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசாக கரும்பு, அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை அடங்கிய 21 தொகுப்புகளும் இதில் அடங்கும் என கூறப்படுகிறது. முதலமைச்சரின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.