#Breaking: புதிய வரலாறை எழுதப்போகும் தமிழினம்.. தமிழக மக்களுக்கான அறிவிப்பு.. வெளியிட்டார் முக ஸ்டாலின்..! 



TN MK Stalin Announcement 23 Jan 2025 irumpin thonmai Book 

 

தமிழக மக்களுக்கான தித்திப்பு செய்தியாக, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் இரும்பின் காலம் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் உள்ள கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலத்தில், தொல்லியல் துறையின் "இரும்பின் தொன்மை" என்ற நூல் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினால் இன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்று அறிவிக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின்,  நேற்று தனது சமூக வலைப்பக்கம் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். 

இதையும் படிங்க: #Breaking: "நாளை முக்கிய அறிவிப்பு" - தமிழ்நாடு முதல்வர் கொடுத்த சஸ்பென்ஸ்.. எதிர்பார்ப்பில் தமிழர்கள்.!

இந்நிலையில், இன்று புத்தக வெளியீடு விழாவில் தமிழ்நாடு முதல்வர், அமைச்சரவை சகாக்கள் முன்பு புத்தகம் வெளியிடப்பட்டது. அப்போது மக்கள் முன்பு முதல்வர் முக ஸ்டாலின் உரையாற்றினார். 

MK Stalin

தமிழர்களின் இரும்பின் காலம்

அறிவிப்பு குறித்து முதல்வர் பேசுகையில், "தமிழர்களின் தொன்மையை உலகுக்கு உரைக்கும் திட்டம் அறிவிக்கப்படவுள்ளது. தமிழ் நிலப்பரில் இருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது. இந்த ஆய்வு மேற்கொள்ள நான் அறிவிப்பு வெளியிடுகிறேன். இதுதான் அந்த மக்களுக்கான அறிவிப்பு. 5300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. 

இந்த தரவுகள் கிமு 4000 ஆண்டுக்குக்கு முன்பு இரும்பு காலத்தை கொண்டு செல்கிறது. தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு உள்ளது. தமிழ்நாட்டில் சேகரிக்கப்பட்ட தொல்லியல் மாதிரிகள், புனே, அகமதாபாத் உட்பட பல்வேறு முன்னணி ஆய்வு நிறுவனங்களுக்கும், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா பன்னாட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கும் இரும்பு தாது தமிழ்நாட்டில் பிரித்தெடுக்கப்பட்ட விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தமிழ்நாட்டுக்கு அறிவிப்பிப்பதில் பெருமை அடைகிறேன். இது தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் பெருமை" என பேசி வருகிறார்.
 

இதையும் படிங்க: #Breaking: அப்படிப்போடு.. பெண்களுக்கு எதிரான குற்றம்.. இனி 5 ஆண்டு சிறை.. சட்டத்திருத்தம் தாக்கல்.!