பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
1 லட்சம் குடும்பங்களுக்கு தரமான மளிகை சாமான்..! கரூர் மக்களுக்கு ஓடி ஓடி உதவி செய்யும் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர்..! குவியும் வாழ்த்துக்கள்.
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த மக்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் தனது சொந்த செலவில் சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு மேல் உதவி செய்துவரும் சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுவருகிறது.
சீனவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. கொரோனாவை தடுக்கும் விதமாக இந்தியாவிலும் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ளதால் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைகளை இழந்து, அன்றாட சாப்பாட்டிற்க்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக அன்றாடம் வேலைசெய்து சம்பளம் பெரும் தினக்கூலி தொழிலாளர்கள் இந்த ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்ட்டுள்ளனர். இதுபோன்ற மக்களுக்கு பல்வேறு தன்னார்வலர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர்.
இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள், கரூர் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகளை செய்துவருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை, 1 கிலோ பருப்பு, அரை லிட்டர் சமையல் எண்ணெய், அரைக்கிலோ சர்க்கரை, 1கிலோ உப்பு, 100 கிராம் மஞ்சள் பொடி உள்ளிட்ட சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்கள் வழங்கும் பணியினை மேற்கொண்டுள்ளார்.
கடந்த 19 ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட இந்த நலத்திட்ட உதவிகள் மூலம் இதுவரை 43,430 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களுடன் கூடிய பைகள் வழங்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தானே முன்னின்று நிவாரண பொருட்களை வழங்கிவருகிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
இந்த நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க சுமார் 35 வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வாகனத்திலும் சுமார் 150 பைகள் வீதம் மொத்தம் 5,250 பைகள் இதுவரை மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கால் சிரமப்படும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை விரைவில் கொண்டுசேர்க்கவும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.
சினிமா பிரபலங்கள்தான் உதவேண்டும் என்று இல்லாமல், ஆட்சியில் இருக்கும் அமைச்சர்களும் உதவி செய்யலாம் என்பதை நிரூபித்துள்ள தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு மக்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துவருகிற்து.