பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க!
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்போர் ஜூன் 14ஆம் தேதி முதல் டி.என்.பி.எஸ்.சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் குரூப் 4 தேர்வுக்கான காலி பணியிடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குரூப் 4 தேர்வுக்காக தமிழகத்தில் ஏராளமானோர் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால், குரூப் 4 தேர்வு பயிற்சிக்கு தற்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.