#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. சுகாதார துறையானது நாள்தோறும் கொரோனா பாதிப்பு தொடர்பானது அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 5, 835 ஆகும்.
தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3, 20, 355 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 5144 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 2, 61, 459 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 5,397 பேர் தமிழகத்தில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.