பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சற்று குறைவுடன் காணப்படும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
கொரோனா ஆரம்ப காலத்தில் இருந்தே தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளது. ஒருசவரன் தங்கத்தின் விலை ரூ.40 ஆயிரம் நெருங்கி அதிர்ச்சியை அளித்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.
இதன்காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து 4,539 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து 36,312 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 24 கார்ட் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,905 ரூபாய்க்கும் சவரன் 39,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 64.90 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 64,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.