பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
இந்தியாவில் நிலவும் பொருளாதார நிலையை பொறுத்து தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. முன்பு எல்லாம் தங்கம் சவரனுக்கு 24 முதல் 26 ஆயிரம் வரை இருந்து வந்த நிலையில் தற்போது அதன் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதனை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து தான் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆபரண தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 39,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 குறைந்து 4905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா உயர்ந்து ரூ.67.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.