#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தூக்கில் தொங்கிய ப்ளஸ்-1 மாணவி..! பதறிய பெற்றோர்!.. ஆசிரியை கண்டித்ததால் விபரீதம்..!
சென்னை, பம்மல் அருகேயுள்ள பொழிச்சலுார், எம். ஜி. ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் லதா. இவரது மகள் ஹரிணி (16). பல்லாவரம் பகுதியில் இயங்கி வரும் அன்னை தெரசா மேல்நிலைபள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பள்ளியில் தேர்வு நடந்ததாக கூறப்படுகிறது. தேர்வுக்கு ஹரிணி முறையாக தயார் ஆகாததால் தான் கொண்டு சென்ற பிட்டு பேப்பரை வைத்து காப்பியடித்துள்ளார். இதனை கவனித்த ஆசிரியை ஹரிணியை கண்டித்துள்ளார்.
இதனால் மன முடைந்த ஹரிணி நேற்று காலை வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். சிறிது நேரத்தில் இதனை கவனித்த அவரது பெற்றோர் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், ஹரினி உயிரிழந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து, சங்கர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்