3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
முழு ஊரடங்கு சமயத்தில் மின்சார ரயில் சேவை இயக்கப்படுகிறதா.? ரயில்வே கோட்டம் வெளியிட்ட தகவல்.!
தற்போது நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது.
கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளது. இந்த ஊரடங்கில் தேநீர் கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்துக்கு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. இதில் அத்தியாவசிய பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால், பயணிகள் எண்ணிக்கை மேலும் குறையும். இதனால் இன்று முதல் சென்னையில் 288 மின்சார ரெயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்கு குறிப்பில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை சென்னையில் 288 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே 98 மின்சார ரயில் சேவையும், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே 50 மின்சார ரயில் சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே 40 மின்சார ரயில் சேவையும், கடற்கரை-செங்கல்பட்டு-திருமால்பூர் இடையே 88 மின்சார ரயில் சேவையும், ஆவடி-பட்டாபிராம் இடையே 12 மின்சார ரயில் சேவையும் என 288 சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் இயக்கப்படுகிறது. இந்த மின்சார ரயிலில் ஏற்கனவே அறிவித்தபடி அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் மட்டும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.