நேற்று மது விற்பனையில் முதலிடம் பிடித்தது எந்த மாநிலம் தெரியுமா? இத்தனை கோடி வசூலா.!
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிக அளவில் பரவியதால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் நிதிநெருக்கடியை காட்டி தமிழக அரசு டாஸ்மார்க் கடைகளை திறந்தது.
ஆனால் மதுக்கடைகள் திறந்த இரண்டு நாட்களிலேயே குடிமகன்கள் அனைவரும் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முககவசம் அணியாமலும் சென்றதாக கூறி உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்தது.
இந்நிலையில் இத்தடையை எதிர்த்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடையை நீக்கி கடந்த சனிக்கிழமை முதல் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டு டோக்கன் முறையில் மது விற்பனை செய்ய தொடங்கினர்.
அதனை அடுத்து கடந்த சனிக்கிழமை மட்டும் மது விற்பனை 163 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு மது விற்பனை படிப்படியாக குறைந்த நேற்று 91.5 கோடி மட்டுமே வசூல் ஆகியுள்ளது. இந்நிலையில் மது விற்பனையில் முன்னிலையில் இருந்த மதுரை மாவட்டத்தை பின்னுக்கு தள்ளி திருச்சி மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. நேற்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் 23.2 கோடி வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.