#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Naaptol இணையம் பெயரில் பரிசு பார்சல் வருகிறதா? மக்களே உஷார்... மருத்துவரிடம் ரூ.8 இலட்சம் நூதன முறையில் அபேஸ்..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் வசித்து வருபவர் சஞ்சீவி பெருமாள் (வயது 68). இவர் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஆவார். சமீபத்தில் நாப்தால் நிறுவனம் மூலமாக ஆன்லைனில் பொருள் வாங்கியுள்ளார். இதன்பின், ஒருவாரம் கழித்து அதே நிறுவனத்தில் இருந்து சஞ்சீவி பெருமாளுக்கு கூரியர் வந்துள்ளது.
அதனை பிரித்து பார்க்கையில் மகேந்திரா கார் பம்பர் பரிசு விழுந்துள்ளதாகவும், கீழ்கண்ட எண்ணுக்கு அழைக்குமாறும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்சாகமடைந்த சஞ்சீவி பெருமாள் விபரீதம் புரியாமல் செல்போனில் இருந்து அழைக்க மறுமுனையில் பேசியவர் ஜி.எஸ்.டி மற்றும் பிற வரி என்று என்று கூறி ரூ.8,34,621-ஐ செலுத்த கூறியுள்ளார்.
சஞ்சீவி பெருமாளும் மர்ம நபர் கூறிய வங்கிக்கணக்கில் பல தவணையாக பணத்தை செலுத்தியுள்ளார். 8 இலட்சம் பணம் வந்ததும் மர்ம நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகவே, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர் திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் சஞ்சீவி வடமாநில ஆசாமிகளால் ஏமாற்றப்பட்டது உறுதியானது.