#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பழிக்குப்பழி கொலை?.. அண்ணனுக்கு விரித்த வலையில் சிக்கிய தம்பி?.. கைவிரல் வெட்டி கொலை.!
கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெறும்பூர், மாவடிகுளம் பகுதியில் கைவிரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இளைஞர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கை விரலை வெட்டி கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பொன்மலைப்பட்டி கடைவீதியில் சின்னராசு என்பவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தற்போது கொலையாகியுள்ள நபர் ஜான்சனின் அண்ணன் அலெக்ஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பழிவாங்கும் பொருட்டு இந்த சம்பவம் நடந்ததா? என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.