#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சொத்து தகராறில் பயங்கரம்... அக்கா, 1 வயது மச்சானை இரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட தம்பி.!
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுக்கும் - அவரது சகோதரருக்கும் இடையே இருந்த சொத்து தகராறில், தம்பி அக்கா மற்றும் அக்கா மகனை வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் திருவெறும்பூரில் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூரில் வசித்து வருபவர் மைக்கேல் டைசன். இவரின் மனைவி தனலட்சுமி (வயது 24). இவரது சகோதரர் தனகோடி (வயது 22). தனலட்சுமி - மைக்கேல் டைசன் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 1 வருடமாக கணவரை பிரிந்த தனலட்சுமி, தனியாக வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 1 வயதுடைய ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், தனலட்சுமி தனது சகோதரர் தனகோடியின் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக அவ்வப்போது இருவருக்கும் இடையே பிரச்சனையும் நடந்து வந்துள்ளது. இந்நிலையில், நேற்றும் இதனைப்போல அக்கா - தம்பி இடையே சண்டை நடந்துள்ளது.
அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற தனகோடி, அரிவாளை எடுத்து சகோதரி தனலட்சுமியை சரமாரியாக வெட்டி இருக்கிறார். மேலும், அவரின் குழந்தைக்கும் வெட்டு விழுந்துள்ளது. தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், இருவரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக துவாக்குடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.